Skip to main content

Posts

Showing posts with the label Index 098 பெருமை

098 பெருமை

பால்  - பொருட்பால் இயல்  - குடியியல் அதிகாரம்  -  பெருமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல் குறள் 972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் குறள் 973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் குறள் 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு குறள் 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல் குறள் 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு குறள் 977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின் குறள் 978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து குறள் 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் குறள் 980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் பதிவு வரிசை