Skip to main content

Posts

Showing posts with the label Index 095 மருந்து

095 மருந்து

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - மருந்து சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று குறள் 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் குறள் 943 அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு குறள் 944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து குறள் 945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு குறள் 946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் குறள் 947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் குறள் 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் குறள் 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் குறள் 950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து பதிவு வரிசை