பால் - பொருட்பால் இயல் - நட்பியல் அதிகாரம் - சூது சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று குறள் 932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு குறள் 933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் குறள் 934 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல் குறள் 935 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் குறள் 936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார் குறள் 937 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் குறள் 938 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது குறள் 939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின் குறள் 940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். பதிவு வரிசை
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.