Skip to main content

Posts

Showing posts with the label Index 090 பெரியாரைப் பிழையாமை

090 பெரியாரைப் பிழையாமை.

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  -  பெரியாரைப் பிழையாமை. சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை குறள் 892 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும் குறள் 893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு குறள் 894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் குறள் 895 யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் குறள் 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின் குறள் 898 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து குறள் 899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் குறள் 900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின் பதிவு வரிசை