பால் - பொருட்பால் இயல் - நட்பியல் அதிகாரம் - புல்லறிவாண்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 841 அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு குறள் 842 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் குறள் 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது குறள் 844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு குறள் 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும் குறள் 846 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி குறள் 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் குறள் 849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு குறள் 850 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் பதிவு வரிசை
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.