Skip to main content

Posts

Showing posts with the label Index 084 பேதைமை

084 பேதைமை

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - பேதைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் குறள் 832  பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல் குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் குறள் 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு குறள் 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் குறள் 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை குறள் 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின் குறள் 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில் குறள் 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் பதிவு வரிசை