Skip to main content

Posts

Showing posts with the label Index 081 பழைமை

081 பழைமை

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - பழைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 801 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு குறள் 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன் குறள் 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை குறள் 804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் குறள் 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் குறள் 806 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு குறள் 807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் குறள் 808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் குறள் 809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. குறள் 810 விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் பதிவு வரிசை