Skip to main content

Posts

Showing posts with the label Index 078 படைச்செருக்கு

078 படைச்செருக்கு

பால்  - பொருட்பால் இயல்  - படையில் அதிகாரம்  - படைச்செருக்கு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 771 என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர் குறள் 772 கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது குறள் 773 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு குறள் 774 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் குறள் 775 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு குறள் 776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து குறள் 777 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து குறள் 778 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் குறள் 779 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் குறள் 780 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து பதிவு வரிசை