Skip to main content

Posts

Showing posts with the label Index 077 படைமாட்சி

077 படைமாட்சி

பால்  - பொருட்பால் இயல்  - படையில் அதிகாரம்  - படைமாட்சி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 761 உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை குறள் 762 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது குறள் 763 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை குறள் 765 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை குறள் 766 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு குறள் 767 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து குறள் 768 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் குறள் 769 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை குறள் 770 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் பதிவு வரிசை