Skip to main content

Posts

Showing posts with the label Index 075 அரண்

075 அரண்

பால்  - பொருட்பால் இயல்  - அரணியல் அதிகாரம்  - அரண் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 741 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் குறள் 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண் குறள் 743 உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் குறள் 744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண் குறள் 745 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண் குறள் 746 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண் குறள் 747 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண் குறள் 748 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண் குறள் 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண் குறள் 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் பதிவு வரிசை