Skip to main content

Posts

Showing posts with the label Index 069 தூது

069 தூது

பால்  - பொருட்பால் இயல்  - அமைச்சியல் அதிகாரம்  - தூது சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 681 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு குறள் 682 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. குறள் 683 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு குறள் 684 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு குறள் 685 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது குறள் 686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது குறள் 687 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை குறள் 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு குறள் 689 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் குறள் 690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது பதிவு வரிசை