Skip to main content

Posts

Showing posts with the label Index 062 ஆள்வினையுடைமை

062 ஆள்வினையுடைமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - ஆள்வினையுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 611 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் குறள் 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு குறள் 613 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு குறள் 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் குறள் 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் குறள் 616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் குறள் 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்  தாளுளான் தாமரையி னாள் குறள் 618 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி குறள் 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் குறள் 620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் பதிவு வரிசை