Skip to main content

Posts

Showing posts with the label Index 052 தெரிந்துவினையாடல்

052 தெரிந்துவினையாடல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - தெரிந்துவினையாடல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் குறள் 512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை குறள் 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு குறள் 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் குறள் 515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்  சிறந்தானென்று ஏவற்பாற் றன்று குறள் 516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் குறள் 517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் குறள் 518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் குறள் 519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு குறள் 520 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு பதிவு வரிசை