Skip to main content

Posts

Showing posts with the label Index 042 கேள்வி

042 கேள்வி

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - கேள்வி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்து ளெல்லாந் தலை. குறள் 412 செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் குறள் 413 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து குறள் 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு  ஒற்கத்தின் ஊற்றாந் துணை குறள் 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  ஒழுக்க முடையார்வாய்ச் சொல் குறள் 416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் குறள் 417 பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர் குறள் 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி குறள் 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது குறள் 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் பதிவு வரிசை