Skip to main content

Posts

Showing posts with the label Index 040 கல்வி

040 கல்வி

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - கல்வி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 391 கற்க கசடறக் கற்பவை கற்றபின்  நிற்க அதற்குத் தக குறள் 392 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு குறள் 393 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் குறள் 394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் குறள் 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் குறள் 396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு குறள் 397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு குறள் 398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து குறள் 399 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு  காமுறுவர் கற்றறிந் தார் குறள் 400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு  மாடல்ல மற்றை யவை பதிவு வரிசை