Skip to main content

Posts

Showing posts with the label Index 037 அவாவறுத்தல்

037 அவாவறுத்தல்

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - அவாவறுத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்  தவாஅப் பிறப்பீனும் வித்து குறள் 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் குறள் 363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல் குறள் 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் குறள் 365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் குறள் 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை  வஞ்சிப்ப தோரும் அவா குறள் 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை  தான்வேண்டு மாற்றான் வரும் குறள் 368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும் குறள் 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் குறள் 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் பதிவு வரிசை