Skip to main content

Posts

Showing posts with the label Index 033 கொல்லாமை

033 கொல்லாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - கொல்லாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் குறள் 322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை குறள் 323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று குறள் 324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி குறள் 325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை குறள் 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று குறள் 327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை குறள் 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை குறள் 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து   குறள் 330 உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் பதிவு வரிசை