Skip to main content

Posts

Showing posts with the label Index 032 இன்னாசெய்யாமை

032 இன்னாசெய்யாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - இன்னாசெய்யாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா  செய்யாமை மாசற்றார் கோள் குறள் 312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் குறள் 313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும் குறள் 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் குறள் 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்  தந்நோய்போல் போற்றாக் கடை குறள் 316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் குறள் 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை குறள் 318 தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் குறள் 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் குறள் 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்  பதிவு வரிசை