Skip to main content

Posts

Showing posts with the label Index 031 வெகுளாமை

031 வெகுளாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - வெகுளாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் குறள் 302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற குறள் 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய  பிறத்தல் அதனான் வரும் குறள் 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற குறள் 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் குறள் 306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்  ஏமப் புணையைச் சுடும் குறள் 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று குறள் 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று குறள் 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் குறள் 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை பதிவு வரிசை