Skip to main content

Posts

Showing posts with the label Index 025 அருளுடைமை

025 அருளுடைமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - அருளுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணும் உள குறள் 242 நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால்  தேரினும் அஃதே துணை குறள் 243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் குறள் 244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை குறள் 245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி குறள் 246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார் குறள் 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு குறள் 248 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது குறள் 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் குறள் 250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்  மெலியார்மேல் செல்லு மிடத்து பதிவு வரிசை