பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - ஒப்புரவறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு குறள் 212 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு குறள் 213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற குறள் 214 ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் செத்தாருள் வைக்கப் படும் குறள் 215 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு குறள் 216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் குறள் 217 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் குறள் 218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் குறள் 219 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு குறள் 220 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து பதிவு வரிசை
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.