Skip to main content

Posts

Showing posts with the label Index 020 பயனில சொல்லாமை

020 பயனில சொல்லாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - பயனில சொல்லாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் குறள் 192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது குறள் 193 நயனிலன் என்பது சொல்லும் பயனில  பாரித் துரைக்கும் உரை குறள் 194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து குறள் 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் குறள் 196 பயனில்சொல்  பாராட்டு  வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல் குறள் 197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் குறள் 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் குறள் 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க  சொல்லிற் பயனிலாச் சொல் பதிவு வரிசை