Skip to main content

Posts

Showing posts with the label Index 019 புறங்கூறாமை

019 புறங்கூறாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - புறங்கூறாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது குறள் 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை குறள் 183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும் குறள் 184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல் குறள் 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் குறள் 186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும் குறள் 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் குறள் 188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு குறள் 189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை குறள் 190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு பதிவு வரிசை