Skip to main content

Posts

Showing posts with the label Index 018 வெஃகாமை

018 வெஃகாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - வெஃகாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் குறள் 172 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் குறள் 173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே  மற்றின்பம் வேண்டு பவர் குறள் 174 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் குறள் 175 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் குறள் 176 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் குறள் 177 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன் குறள் 178 அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை  வேண்டும் பிறன்கைப் பொருள் குறள் 179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு குறள் 180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு பதிவு வரிசை