Skip to main content

Posts

Showing posts with the label Index 017 அழுக்காறாமை

017 அழுக்காறாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - அழுக்காறாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு குறள் 162 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் குறள் 163 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். குறள் 164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து குறள் 165 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது குறள் 166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் குறள் 167 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் குறள் 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்  தீயுழி உய்த்து விடும் குறள் 169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் குறள் 170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் பதிவு வரிசை