Skip to main content

Posts

Showing posts with the label Index 009 விருந்தோம்பல்

009 விருந்தோம்பல்

பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - விருந்தோம்பல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி  வேளாண்மை செய்தற் பொருட்டு குறள் 82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா  மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று குறள் 83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று குறள் 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். குறள் 85 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் குறள் 86 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்  நல்வருந்து வானத் தவர்க்கு குறள் 87 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் குறள் 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் குறள் 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு குறள் 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து பதிவு வரிசை