Skip to main content

Posts

Showing posts with the label Index 003 நீத்தார் பெருமை

003 நீத்தார் பெருமை

பால்  - அறத்துப்பால் இயல்  - பாயிரவியல் அதிகாரம்  -  நீத்தார் பெருமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று குறள் 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு குறள் 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து குறள் 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் குறள் 27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் குறள் 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் பதிவு வரிசை