Skip to main content

Posts

Showing posts with the label Index 002 வான்சிறப்பு

002 வான்சிறப்பு

பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - வான்சிறப்பு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று குறள் 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை குறள் 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு பதிவு வரிசை கற்க கசடற - உயர் வள்ளுவம் - இலங்கை ஜெயராஜ் அவர்களின்  விரிவுரை  வான்சிறப்பு