குறள் 916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]
பொருள்
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.
நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
பாரிப்பார் - பாரித்தல் - பரவுதல்; பருத்தல்; மிகுதியாதல்; தோன்றுதல்; ஆயத்தப்படுதல்; வளர்த்தல்; தோன்றச்செய்தல்; அமைத்துக்கொடுத்தல்; உண்டாக்குதல்; நிறைத்தல்; அணிதல்; அருச்சித்தல்; வளைத்தல்; உறுதிகொளல்; விரும்புதல்; காட்டுதல்; பரப்புதல்; பரக்கக்கூறுதல்; சுமையாதல்; நோயினால்கனமாதல்; இன்றியமையாததாதல்; சுமத்துதல்; காத்தல்; ஒத்தல்.
தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.
தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார்
தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.
தகை - (வி)தடுத்துவிடு; ஆணையிடு.
செருக்கி - செருக்குதல் - ஆணவங்கொள்ளுதல்; பெருமிதமுறுதல்; களித்தல்; மிகுத்தல்; நன்குநுகர்தல்; மதர்த்தல்; பாக்குமுதலியனதொண்டையில்அடைத்துக்கொள்ளுதல்; மயங்குதல்.
புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.
புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி
நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
பாரிப்பார் - பாரித்தல் - பரவுதல்; பருத்தல்; மிகுதியாதல்; தோன்றுதல்; ஆயத்தப்படுதல்; வளர்த்தல்; தோன்றச்செய்தல்; அமைத்துக்கொடுத்தல்; உண்டாக்குதல்; நிறைத்தல்; அணிதல்; அருச்சித்தல்; வளைத்தல்; உறுதிகொளல்; விரும்புதல்; காட்டுதல்; பரப்புதல்; பரக்கக்கூறுதல்; சுமையாதல்; நோயினால்கனமாதல்; இன்றியமையாததாதல்; சுமத்துதல்; காத்தல்; ஒத்தல்.
தோள் - புயம்; கை; தொளை
முழுப்பொருள்
தன்னுடைய புகழை பெருமையை, அறத்தை பெரிதெனப் போற்றும் பெரியோர்கள் அறிவுள்ளவர்கள் பொய்யுடம்பின் அழகினை முதலெனக் கொண்டு அதனை பெரிதெனப் போற்றி வளர்த்து பொருள் ஈட்ட பலருடன் புணரும்/கூடும் விலைமாதர்களின் தோள்களை தொட மாட்டார்கள்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்: வனப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை.
மணக்குடவர் உரை
தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார். (ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தம்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.).
மு.வரதராசனார் உரை
அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
சாலமன் பாப்பையா உரை
தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.
No comments:
Post a Comment