குறள் 889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு
[பொருட்பால், நட்பியல், உட்பகை]
பொருள்
பொருள்
எட் - எள் - ஒருவகைச்செடி, ஒருதவசம்; ஒருசிறியஅளவு; நிந்தை
எள் - eḷ எள்ளு, s. rape-seed, sesamum, திலம், Different kinds of it are காட் டெள், காரெள், சிற்றெள், பேரெள், மயிலெள் etc. 1.Sesame, a plant cultivated for the oil obtainedfrom its seed, Sesamum iṅdicum;
பகவு - துண்டு; பங்கு; வெடிப்பு.
பகுத்தல் - பங்கிடுதல்; வகைப்படுத்தல்; தெளிவாய்க்கூறுதல்; கொடுத்தல்; வெட்டுதல்; பிடுங்குதல்; கோதுநீக்குதல்.
அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.
சிறுமைத்தே - சிறுமை -இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.
உட்பகை - நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு.
உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை
முழுப்பொருள்
ஒரு எள் என்பது மிகவும் சிறிய ஒரு விதையாகும். ஒரு எள் விதை எடையற்றது என்றே கூறலாம். சில மில்லி க்ராம்களில் (mg) தான் இடை இருக்கும். ஒரு முழு எள் விதையே எடையற்றதுப்போல் இலகுவானது என்றாலும் அவ்விதையை பகுத்தால், அதன் பாதி மேலும் இலகுவாக இருக்கும். அதுப்போல உட்பகை பார்க்க மிக இலகுவாக மிக மிக சிறியதாகத் தோன்றினாலும் அது உள்ளத்தில் இருந்தால் அது உள்ளத்திற்கும் உறவுகளுக்கும் கேடே. உட்பகை உள்ளத்தில் தோன்றிவிட்டால் அழிவு ஏற்பட்டு துன்பமே எஞ்சும்.
இங்கே திருவள்ளுவர் உட்பகை உள்ளத்தில் இருக்கக்கூடாது என்பதை அழுத்தமாகவே பதிவு செய்கிறார். ஏனெனில் உள்ளமே அனைத்திற்கும் ஊற்றாகும். நல்லது விதைத்தால் நல்லது நடக்கும் பெருகும். தீயது (உட்பகை) விதைத்தால் அழிவே நடக்கும் துன்பம் பெருகும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம். (எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும் உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம். இது பகை சிறிதென் றிகழற்க வென்றது.
மு.வரதராசனார் உரை
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை
எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
No comments:
Post a Comment