Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

 

குறள் 888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி
[பொருட்பால், நட்பியல், உட்பகை]

பொருள்
அரம் - இரும்பைத்தேய்க்கப்பயன்படும்கருவி; விரைவு வண்டி பாதலம் தோல்

பொருத - பொருதல் - போர்செய்தல்; சூதாடுதல்; மாறுபடுதல்; வீசுதல்; தடவுதல்; ஒப்பாதல்; தாக்குதல்; கடைதல்; முட்டுதல்; பொருந்துதல்; காண்க:தும்பை.

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்என்னும்நான்குவகைப்பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி

போல - ஓர்உவமவுருபு

தேயும் -தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.

உரம் - வலிமை; திண்மை திடம் மரவயிரம்; எரு மார்பு அறிவு ஊக்கம் படைவகுப்பின்முன்னணி; குழந்தைகளுக்குவிழும்சுளுக்குவகை; மதில் உள்ளத்தின்மிகுதித்தன்மை; விரைவு

பொருது  பொருதல் - போர்செய்தல்; சூதாடுதல்; மாறுபடுதல்; வீசுதல்; தடவுதல்; ஒப்பாதல்; தாக்குதல்; கடைதல்; முட்டுதல்; பொருந்துதல்; காண்க:தும்பை.

உட்பகை - நட்புப்பாராட்டிக்கெடுக்கும்பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு.

உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

முழுப்பொருள்
பொற்கொல்லான் கையில் இருக்கும் பொன்னை தேய்க்கின்ற அரம் கருவி பொன்னை தேய்த்தால் தேயும். வலிமையான இரும்பாவது துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் பொன் அப்படிப்பட்டது அல்ல. அவ்வளவு எளிதில் வலிமை இழக்காது. ஆனால் அவ்வளவு வலிமையான பொன்னும் அரம் தேய்த்தால் தேய்ந்துவிடும். மேலும் பொன்னினால் இதனை நிறுத்த முடியாது. அரத்தினால் மட்டும் தான் நிறுத்த முடியும். 

அரம் தேய்த்தால் பொன்னும் தேயும். அதுப்போல வலிமையான மூர்க்கமான சண்டைகள் உட்பகையாக பல உறவுகளை உற்ற குடிகளை அறுத்து எறியும். அதனால் பெரிய துன்பமே ஏற்படும். உட்பகை முடிந்தால் தான் குடிகள் தப்பிக்கும். இல்லையேல் அரம்போல் சிறுக சிறுக அறுத்துக்கொண்டே இருக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உட்பகை உற்ற குடி - முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி, அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். ('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உட்பகையானது உற்ற குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலி தேயும். இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை
அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

No comments:

Post a Comment