குறள் 887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
[பொருட்பால், நட்பியல், உட்பகை]
பொருள்
பொருள்
செப்பின் - செப்புதல் - செப்புதல் - சொல்லுதல்; விடைசொல்லுதல்.
செப்பு - சொல்; விடை; செம்பு; சிமிழ்; நீர்வைக்கும்குடுவை; சிறுமியர்விளையாட்டுப்பாத்திரம்; இடுப்பு.
செப்பு - ceppu n. செம்பு. 1. See செம்பு, 1.2. [M. ceppu.] Casket, little box of metal,ivory or wood; சிமிழ். செப்பின் புணர்ச்சிபோற்கூடினும் (குறள், 887). 3. A kind of water-vessel;நீர்வைக்குங் கரகம். சேமச் செப்பிற் பெறீஇயரோ(குறுந். 277). 4. Toy utensils; விளையாட்டுப் பாத்திரம். Colloq.
சிமிழ் - cimiḻ n. perh. சிமிழ்¹-. 1. Smallround jewel box, small casket; செப்பு தட்டானடித்த சிமிழ்போல் (தனிப்பா. ii, 160, 399).
புணர்ச்சி - சேர்க்கை; ஒரேநாட்டார்ஆதல்; கலவி; எழுத்துமுதலியவற்றின்சந்தி; முன்பின்தொடர்பு; அணிகலன்.
போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.
கூடினும் - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை.
கூடாதே - ஒன்று கூடாது ; சேராது
உட்பகை - நட்புப்பாராட்டிக்கெடுக்கும்பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு.
உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
முழுப்பொருள்
”செப்பின் புணர்ச்சிபோல்” என்றால் செப்பு தட்டானாடித்த சிமிழ் என்று அர்த்தம். அதாவது ஒரு சிறிய ஜாடியை செப்பு சிமிழால் மூடி வைத்திருப்பதுப் போல் ஆகும்.
ஒரு ஜாடியின் மேல் ஒரு செப்பு மூடிப் போட்டு மூடி இருத்தாலும், பார்க்க அது ஒன்றாக தோன்றும். ஆனால் அவை எந்நேரமும் கீழே விழக்கூடும். ஜாடிக்குள்ளே இருப்பவை சிந்தி நஷ்டம் ஏற்படும். மேலும் ஒரு குறிபிட்ட எடைக்குப் பிறகு மூடி தாங்காமல் கீழே விழும். அதுப்போல ஒரு குழுமத்தில் அல்லது குடும்பத்தில் அல்லது ஒரு நிர்வாகத்தில் அல்லது நண்பர்கள் இடத்தில் உட்பகை இருந்தால் வெளியே இருந்து பார்க்க ஒன்றாக இருப்பதுப்போல் தோன்றும் ஆனால் அவ்வுறவுகள் எந்நேரமும் பகை தாளாமல் முறிந்து பெரும் துன்பத்தை தரக்கூடும்.
உட்பகை இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்நேரமும் அழிவு ஏற்பட்டுத் துன்பம் வரும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார். (செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடு வந்தது என்பதுபோலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும், உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
உட்பகையும் அஃது உற்ற குடியும், செப்பும் மூடியும் பொருந்தினாற் போலப் பொருந்தினவாயினும், பொருத்தமில்லவாம். உட்பகையுற்றார் செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து செப்பகத்துப் பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் அகன்று நிற்குமதுபோல அகன்று நிற்பரென்றவாறு.
மு.வரதராசனார் உரை
செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.
No comments:
Post a Comment