Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

குறள் 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
உருவு - உருவம்; வடிவு அழகு அச்சம்
உருவு - (வி)உருவுஎன்னும்ஏவல்; ஊடுருவு.

கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளாமை - இகழ்ச்சி வேண்டாம்

வேண்டும் -  வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

உருள் - தேருருளை; வண்டி உரோகினி; வட்டம்
உருள் - (வி)புரள்; உருட்டு திரள் அழி

பெருந் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத., பெரியது; மிகவும்.

தேர்க்கு - தேர் - இரதம்; சிறுதேர்; காண்க:கொல்லாவண்டி; உரோகிணிநாள்; கானல்; பௌத்தமுனிவர்.

அச்சு - அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம்

ஆணி - இரும்பாணி; அச்சாணி எழுத்தாணி மரவாணி உரையாணி புண்ணாணி மேன்மை ஆதாரம் ஆசை சயனம் பேரழகு; எல்லை

அச்சாணி - கடையாணி, ஊர்திகளின்இருசில்சக்கரம்கழலாமல்செருகப்படும்ஆணி.

அன்னார் - Such persons

உடைத்து - இருக்கும்

முழுப்பொருள்
ஒரு மிகப்பெரிய தேரினை வடத்தை (வடம்) இழுத்து நகர்த்துவர். அத்தேர் பெரிய சக்கரங்களில் நகருகிறது/ஓடுகிறது. சக்கரங்கள் இல்லாமல் தேர் நகராது. ஆயினும் அச்சக்கரங்களுக்கும் தேருக்கும் இணைப்பாக ஒரு அச்சாணியே இருக்கிறது. பெரிய சக்கரங்கள் ஓடுவதற்கு தேவை என்றாலும் அவற்றைவிட மிக சிறிய அச்சாணியும் மிக மிக தேவையானது. அச்சாணி இல்லாமல் சக்கரங்கள் சிறிது தூரத்திற்கு மேல் நகரமுடியாது. அச்சாணி இல்லாமல் முறிந்த தேர் கதைகள் எல்லாம் உண்டு.

அதுப்போல் எவ்வளவு பெரிய செயலை (தேர் இழுப்பது) செய்தாலும் அதற்கு கடும் உழைப்பு (சக்கரங்கள்) இன்றியமையாதது. உழைப்பு (தேர்) இல்லாமல் செயல் நடக்காது (தேர் ஓடாது). ஆயினும் செய்யும் செயலின் கண் மன உறுதி /வினைத்திட்பம் (அச்சாணி) இல்லையேல் அச்செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாது. ஆதலால் அளவில் சிறிதாயினும் செயலின்கண் மன உறுதியை இழக்காது ஒரு செயலை செய்யவேண்டும்.

சிறு அச்சாணியின் வலிமையை உருவில் சிறிய அமைச்சர்களின் வினைத் திண்மைக்கு உவமையாக வள்ளுவர் கூறியது நயமானது. வலிமையென்பது உருவில் அல்ல, உள்ளத்துள்ளது என்பதும் உணர்த்தப்பட்டது. கடுகு சிறியதாயினும் காரம் பெரியது அல்லவா?

மேலும், மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் (அமைச்சர்கள்) எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.



இராதே பக்கங்கள்: அச்சாணி


கீழ்வரும் அறநெறிச்சாரப் பாடல், தற்புகழ்ச்சி வேண்டாம் என்பதற்காகச் சொல்லப்பட்டாலும், “சிறு துரும்புல் பல்குத்த உதவும்” என்ற பொருளில் வந்தாலும், சிறு அச்சாணி பெரிய அளவில் உதவுவதைக் குறிப்பதைக் காணலாம். அப்பாடல்:

”பலகற்றோம் யாமென்று தற்புகழ்தல் வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்” (அறநெறி 42)

“மாணியாம் படிவ மன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணியிவ் வுலகுக் கெல்லாம் என்னலாம் ஆற்றற் கேற்ற
சேணுயர் பெருமை தன்னைச் சிக்கறத் தெளிந்தேன் பின்னர்க்
காணுதி மெய்ம்மை யென்று தம்பிக்குக் கழறிக் கண்ணன்” (கம்ப.மராமரப்.21)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.

மு.வரதராசனார் உரை
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

Thirukkural - Management - Leadership
Valluvar uses a metaphor from the field of vehicle to drive the irrelevance of physical size for a leader. He, through Kural 667, refers to the kingpin of a vehicle to educate us on the irrelevance of size.

Don't despise by looks. the linchpin holds
The huge wheel in place.

Though the kingpin is small, it gives the maximum protection to the wheels of a vehicle or a chariot. The safety of a vehicle depends entirely on its kingpin.

A leader must not underestimate  or laugh at a person's capability or likely contribution based on  that person's size and appearance.

No comments:

Post a Comment