Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Friday, August 21, 2020

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது



குறள் 648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் 
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்  
விரைந்து - மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல்.

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.

கேட்கும் - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

நிரந்து - நிரத்தல் - பரத்தல்; நிரம்புதல்; கலத்தல்; சமாதானப்படுதல்; ஒழுங்குசெய்தல்; நெருங்குதல்; போதியதாதல்; சமபங்கிட்டுஅளித்தல்.

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

வல்லார்ப் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

பெறின் -  பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள் 
இவ்வுலகம் யார் கூறுவதை விரைந்து ஏற்றுக்கொள்ளும்? 
யார் ஒருவர் தான் கூறும் கருத்துக்களை ஒழுங்கப்பட ஒரு வடிவம் கொடுத்து தொகுத்து செறிவாக இனிய வார்த்தைகளால் பிறருக்கு சீராக எடுத்துக்கூறும் திறமை பெற்றுள்ளாரோ அவர் கூறுபவவற்றை இவ்வுலகம் தாமதம் செய்யாது கேட்டு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும். ஒழுங்கற்ற பேச்சோ எழுத்தா மிக விரைவில் சலிப்படையச்செய்யும். தொடர்ந்து கேட்கவோ எழுதவோ மாட்டர்.

ஒருவன் சொற்களை ஒழுங்குப்பட தொகுத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு ஆழ்ந்த அறிவும் தெளிவும் மிக அவசியம். நான் அமேசான் (Amazon) நிறுவனத்தில் ஒரு மூத்த மேலாளராக சில காலம் பணிப்புரிந்தேன். அப்பொழுது எந்த ஒரு திட்டம், அறிக்கை, மாதாந்திர அறிக்கை, காலாண்டு அறிக்கை, ஆண்டு திட்டம், ஆண்டு குறிக்கோள்கள், ஆண்டில் வணிகத்தின் விமர்சனம், என்று எதுவாக இருப்பினும் அதனை இரண்டு முதல் ஆறு பக்கங்களுக்குள் எழுத வேண்டும். புள்ளிகள் (Bullet Points) கொண்ட வரிசை முறைக்கூட கூடாது. காட்சி வடிவில் இருக்கும் presentationங்கள் வெளிப்படையாக தடைசெய்யபட்டுள்ளது. ஏன் எழுத்தில் வடிவில் அறிக்கை வடிவில் மட்டும் தான் என்று கேட்டால் அதற்கு பதில், வார்த்தைகளால் எழுதுவது மிக கடினம். அதற்கு நிறைய தகவல்களும் தெளிவும் ஒழுங்கும் தேவை. உழைக்காமல் அது சாத்தியமாகாது. நன்றாக  ஆராய்ந்து தெளிவுடன் எழுதுவோரின் திட்டங்கள் விரைவாக ஏற்றுக்கொள்ளப்படும். அதுவே அரைகுறையாக எழுதுவோரின் அறிக்கைகள் தயவு தாட்சியினியம் இன்றி கிழித்து தொங்கவிடப்படும். 

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
தொழில் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் - சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் - உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும். (தொழில் - சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். 'சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்', என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின் உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர். இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

சாலமன் பாப்பையா உரை
சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

Thirukkural - Management - Public Speaking - Ruling the world

The world eagerly listens to business knowledge, accepts, and acts according to the counsel of a speaker who gathers his thoughts, arranges them logically – well organized – and articulates politely and pleasantly to his listeners. The world is longing for the counsel of a person who has knowledge and can put across his views according to the needs of the people, suggests Kural 648.

The world will run and listen to a speech 
Sweet and well-set. 

A person with those qualities becomes the leader of the masses.

English Meaning - As I taught a kid - Rajesh
The world will promptly pay attention to those who can speak coherently (well organized/structured, logical, reasonable) and pleasingly.  When soemone speaks without a structure, it would be difficult for the listener to connect or comprehend what the person is talking. Hence, structure is very important. When someone is not speaking pleasantly, the people listening will not find it respectful and will find it annoying. There is no reason why someone should tolerate or listen to unpleasant talks. Moreover, when someone is talking unpleasant or hatredly, the mind will focus on giving reaction rather than really listening. 

Questions that I ask to the kid
Whom would the world instantly pay attention to?

No comments:

Post a Comment

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...