குறள் 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
பொருள்
பொருள்
அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.
இல்லார்க்கு - இல்லாதவர்
இல்லாகும் - இல்லாமல் போகும்; இல்லாதொழியும்
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.
அஃது - aḵtu pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
உண்டேல் - உள்ளது என்றால்
உண்டு -
- உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு
- To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும்
தவா - தவு-தல் - tavu- prob. 11 & 4 v. intr. தபு-.cf. dabh. [K. tavu.] To shrink; to be reduced;to be ruined; குன்றுதல் எஞ்ஞான்றுந் தவாஅப்பிறப்பீனும் வித்து (குறள், 361).
அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.
மேன்மேல் - பின்னும்பெருக
வரும் - வரும் ; வந்து சேரும்
முழுப்பொருள்
அவா (அதாவது ஆசைகள், விருப்புகள், விழைவுகள்) இல்லாதவர்க்கு துன்பங்கள் இல்லை. துன்பங்கள் இல்லாத நிலையே சக்தி என்று பாரதியார் கூறியுள்ளார். ஆசைகள் இல்லாது இருந்தால் துன்பங்கள் அல்லாது சக்தியை அதாவது இன்பத்தை அடையலாம்.
ஆனால் அவா ஒருவரிடம் இருந்தால் அவரை வதைக்கும் துன்பம் குன்றாது மேன்மேலும் வந்துக்கொண்டே இருக்கும். ஏனெனில் ஆசைகளால் தான் துன்பங்கள் விளைகிறது. ஆதலால் துன்பம் வேண்டாம் என்றால் ஆசைகளை அறு என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
ஆசை என்பது வெட்ட வெட்ட மேன்மேல் வளரும் என்று குறிப்பதை கீழ்க்காணும் குறளில் காணலாம்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.
மு.வரதராசனார் உரை
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
சாலமன் பாப்பையா உரை
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
No comments:
Post a Comment