ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

thirukkural meaning விளக்கம் குறள் 886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது பொருட்பால், நட்பியல், உட்பகை
குறள் 886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
[பொருட்பால், நட்பியல், உட்பகை]

பொருள்
ஒன்றாதல் - ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்; முதலாதல்; இணையின்றாதல்.

ஒன்று-தல் - oṉṟu-   5 v. intr. ஒன்று [T.onaru, K. ondu.] 1. To unite; to coalesce; togrow together, as two trees; to become one;ஒன்றாதல். 2. To agree; சம்மதித்தல் 3. To beon intimate terms with; மனங்கலத்தல். நிரயங்கொள்பவரோ டொன்றாது (புறநா. 5, 6). 4. To setone's mind solely on an object; ஒருமுகப்படுதல்.நன்புல னொன்றி நாதவென் றரற்றி (திருவாச. 4, 82).5. To resemble; to be similar; உவமையாதல்.வேயொன்று தோளொருபால் (தொல். பொ 286,உரை.)  

ஒன்றாமை - மனம் கலங்காது இருத்தல்  ; பகையில்லாது இருந்தால் 

ஒன்றியார் -இணைந்து இருப்பவர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

படின் - பட்டால் 

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்

பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வைமுதலியனகுறைதல்

பொன்றாமை - அழியாது ; இறக்காது 

ஒன்றல் - ஒன்றுதல்; பொருந்துதல்

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
தன்னுடன் இருப்பவர்களிடம் மனவேறுபாடு உட்பகை ஆகியவை தோன்றாமல் வளராமல் இருக்குமாயின் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருப்பார் ஆயின் பின்பு எக்காலமும் அவர்களால் அழிவென்பது தோன்றுவது மிக மிக அரிதாகும். 

ஒரு நாட்டில் அல்லது உறவுகளில் அல்லது குடும்பங்களில் உட்பகை இருக்குமாயின் வேறேதும் தேவையில்லை அந்த உட்பகை ஒன்றே எல்லா அழிவையும் தந்துவிடும். அந்த அழிவு நேராமல் தப்பிப்பது மிக மிக அரிது.

ஆதலால் உட்பகை தோன்ற அனுமதிக்காமல் இருப்பது நமக்கு எல்லாவிதத்திலும் நன்மையே. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது. இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

சாலமன் பாப்பையா உரை
தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain