குறள் 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
திறன் - திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.
அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
சொல்லுக - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.
சொல்லை - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
அறனும் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
பொருளும் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
அதனின் - அதை விட
ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்; உவ்விடம்; விசேடம்.
இல் - இல்லை
முழுப்பொருள்
ஒரு சொல்லின் திறன் அதாவது பொருள் வலிமை மேன்மை கூறுபாடு இயல்பு அறிந்து அச்சொல் கூறப்படும் இடம் காலம் மக்கள் ஆகியோரையும் அறிந்து அச்சொல்லின் விளைவுகள் அறிந்து அச்சொல்லை சொல்ல /பேச வேண்டும். அதுப்போல சிறந்த அறம் (ஞானம், கடமை), பொருள் (அறிவு, பயன், செல்வம், தலைமை, ஆக்கம்) வேறு ஏதுமில்லை. இது எழுத்துக்கும் பொருந்தும்.
தவறான சொற்களை பயன்படுத்தினால் செயல் கெட்டுப்போகும், மனஉளைச்சல்கள் பிறக்கும், வஞ்சம் உருவாகும், உறவுகள் முறியும், போர்கள் ஏற்படும். ஆதலால் தவறான சொற்களை தவறான இடத்தில தவறான விதத்தில் பயன்படுத்தாதே. சொல் எண்ணிப் பேசு.
ஒப்புமை
“..............திறனன்று மொழியினும்
வறிது பெயர்குந ரல்வர்” (புறநா 124:2-3)
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.).
மணக்குடவர் உரை
சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.
மு.வரதராசனார் உரை
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.
Thirukkural - Management - Public Speaking - Audience Analysis
An audience is similar to the road on which we drive our vehicles. The condition of the road decides the speed of a vehicle and the comfort of driving. Similarly, the level of the audience influences the flow of a presentation and the accomplishment of objectives. The profile of the audience influences our speeches. Profile includes their age, gender, number, experience, education, exposure, and expertise.
Selecting and speaking words and concepts that match with the understanding ability of the listeners is the best virtue and wealth of all according to Kural 644.
The most essential quality for a speaker is to study the level of comprehension of the listeners. This will help him customize his speech to suit the requirements. If our listeners cannot understand what we say, our presentation will be a waste of time, energy, and money for our listeners and us. A common mistake with a few ineffective speakers is the inability to connect with their audience. Valluvar’s suggestion was definitely practiced by Sir Winston S Churchill. Let us remember Churchill’s wisdom, “It’s no use saying we are doing our best. You have got to succeed in doing what is necessary.”
English Meaning - As I taught a kid - Rajesh
One has to understand the strength, might, capabilities, nature and reach of words. One has to speak words that befit the capabilities while considering the time, place, subject, audience, result, short term and long term impact. There is no greater 1) virtue, wisdom, responsibility and 2) wealth than that. When we use inappropriate, wrong words, it our actions will fail, depression will set it, vengeance will start, relations split, wars begin etc. Don't speak wrong words. Think and count your words and speak.
Questions that I ask to the kid
What is no greater than virtue and wealth?
When we speak, what should we know about our words? Why?
No comments:
Post a Comment