குறள் 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
பொருள்
ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.
நாளை - அடுத்ததினத்தில்; நாளுக்குரிய.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
பொருள்
ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.
ஒறுத்தார்க்கு - தண்டித்தவர்க்கு ; கடிந்தவர்க்கு ; இகழ்ந்தவர்க்கு
ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.
நாளை - அடுத்ததினத்தில்; நாளுக்குரிய.
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
பொறுத்தார்க்குப் - பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்
பொன்றும் - பொன்று - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வைமுதலியனகுறைதல்
துணையும் - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை
முழுப்பொருள்
ஒருவர் நமக்கு தீமை செய்தால் அவரை தண்டித்தாலோ அல்லது இகழ்ந்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ நமக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதிகபட்சமாக அவனை தண்டித்தமைக்கான இன்பம் அன்று ஒரு நாள் மட்டும் மனதில் இருக்கும். ஆனால் அது பொய்யின்பம். புகழும் குன்றும்.
ஆனால் அத்தீமையை பொறுத்தாருக்கு (மன்னித்து தண்டிக்காதவருக்கு) என்றும் அழியாத அளவிற்கான புகழ் கிட்டும். பொறுத்தவரை இவ்வுலகமும் காக்கும்.
ஆனால் அத்தீமையை பொறுத்தாருக்கு (மன்னித்து தண்டிக்காதவருக்கு) என்றும் அழியாத அளவிற்கான புகழ் கிட்டும். பொறுத்தவரை இவ்வுலகமும் காக்கும்.
இங்கே பொறுத்தார் என்றால் மன்னித்து தண்டிக்காதவர் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மன்னிக்கவில்லை என்றால் நாம் அச்சிறையில் இருப்போம். அதில் இருந்து விடுதலை இல்லை. துன்பமே. ஆதலால் அவரை மன்னித்து தண்டிக்காமல் இருந்தால் நமக்கு இன்றும் என்றும் நிம்மதியும் பிற்காலத்தில் நமக்கு புகழும் கிட்டும். பொறுத்தவரை இவ்வுலகம் காக்கும்.
உதாரணமாக அஹிம்சையை பின்பற்றுகின்ற நாடுகளை இவ்வுலகம் போற்றும். அவசியமெனில் அவர்கள் பக்கம் வந்து அவர்களுக்கு துணையாக நிற்கும்.
உதாரணமாக அஹிம்சையை பின்பற்றுகின்ற நாடுகளை இவ்வுலகம் போற்றும். அவசியமெனில் அவர்கள் பக்கம் வந்து அவர்களுக்கு துணையாக நிற்கும்.
ஒப்புமை
”கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால்” (பழ 19)
மேலும்: அஷோக் உரை
கவிதைகள்
பொறுமை என்பது
இன்பத்தின் திறவுகோல் !
அறிவின் கையும் காலும்
அதுதான் !
இறைத்தூதர்களின்
பலமும் ஒளியும்
அதுதான் !
காற்றடித்தால் மலையாடுமா?
அடிக்கும் காற்றுக்கெல்லாம் ஆடினால்
அது வைக்கோல் !
- ஒரு சூஃபி கவிதை, மஸ்னவி
பரிமேலழகர் உரை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது].
மணக்குடவர் உரை
ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.
மு.வரதராசனார் உரை
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
சாலமன் பாப்பையா உரை
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
Thirukkural - Management - Tolerance
A person who punishes the person who has created troubles to him gains temporary satisfaction by doing that. But that satisfaction lasts just for a day. On the contrary, a person who tolerates the person who has created trouble to him will have satisfaction and fame until the end of the world, convinces Kural 156.
The avenger's joy is for a day,
The forgives's fame lasts like the earth's.
The satisfaction one gains by tolerating troubles created by others is endless. A long lasting fame and respect is many times greater than a temporary satisfaction.
No comments:
Post a Comment