Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

குறள் 1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

இலன் - இல்லை என்று

இலனாய்க் - இல்லாதவனாய்

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வானை - வாழ்வான் -  வாழ்கின்றவன்

சுற்றமாச் - சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

சுற்றும் - சூழ
சுற்றுதல் - சுற்றிவரல்; சுழன்றுசெல்லுதல்; வளைந்தமைதல்; கிறுகிறுத்தல்; மனங்கலங்குதல்; தழுவுதல்; விடாதுபற்றுதல்; சூழ்ந்திருத்தல்; வளையச்சூடுதல்; வளையக்கட்டுதல்; சுருட்டுதல்; சிந்தித்தல்; அலைதல்; உடுத்துதல்; சுழற்றுதல்; கம்பிகட்டுதல்; வஞ்சித்தல்:கைப்பற்றல்

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
பிழைகள் செய்யாது பிறர்க்கு துன்பங்கள் தராது குற்றங்கள் புரியாது தன்னுடைய குடியினை (குடும்பம், நாடு) மேம்படுத்தி வாழ்பவனை இவ்வுலக மக்கள் தனது உறவாக நட்பாக சுற்றமாக விரும்பி அவனை சூழ்ந்து இருப்பர். 

குற்றங்கள் செய்யாது தன்னையும் தன் குடும்பத்தையும் மேம்படுத்துபவன் உண்மையாகவே வாழ்பவன் என்பதில் வாழ்தல் என்பதன் அர்த்தம் பொதிந்துள்ளதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். 

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.

மு.வரதராசனார் உரை
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person does his/her responsibilities without doing any mistakes / crime / injustice and improves his/her family's well being and stature, then the world would embrace him/her as their relation and surround him/her. 
Also note and understand, a person is considered living(வாழ்தல்) only when he doesn't do mistakes, does his responsibilities and improves his family.

Questions that I ask to the kid
Who will the world embrace as their relation? Why?


No comments:

Post a Comment