காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

thirukkural meaning விளக்கம் குறள் 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்
குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
காமமும் - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நாணும் - நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

காவு - சோலை; சிறு தெய்வங்களுக்கு இடும் பலி; காவுப்பொருட்குரியமை

காவுதல் - காவடிசுமத்தல்; சுமத்தல்; விரும்புதல்.

காவாத் - உயிரை வாங்காமல்

தூங்கும் - தூங்குதல் - அசைதல்; தொங்குதல்; ஊசல்முதலியவற்றில்ஆடுதல்; சோம்பலாயிருத்தல்; வாடுதல்; சாதல்; இடையறாதுவிழுதல்; ஒலித்தல்; நிலையாகத்தங்குதல்; மெத்தெனநடத்தல்; செறிதல்; கூத்தாடுதல்; துயிலுதல்; தாமதித்தல்; அழுந்துதல்; மிகுதல்.
என்

*நோனாமை, 1. non-endurance, want of restraint, நோலாமை; 2. envy, grudging, பொறாமை.
*நோல்¹-தல்  To endure, suffer patiently, as hunger; பொறுத்தல். உண்ணாது நோற்பார் பெரியர் (குறள்,160).
*(நோல்) penance, தவம்; 2. fasting, உபவாசம்.

நோனா - காதல் தரும் துயரில் வாழும் நான் இத்தனை நாள் பொறுத்துக்கொண்டேன் ஆனால் இனிமேல் பொறுக்கமாட்டாது.

நோனா என்பது அழகான சொல். பொறுக்கமாட்டாத என்பது பொருள். உடம்பும் உயிரும் நோனா. காப்பாற்ற மடல்மட்டுமே உண்டு.

உடம்பின் - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.


முழுப்பொருள்
(தலைவன் மேல் கொண்ட) காதல் (பிரிவில் இருக்கும் பொழுது) தரும் துயரில் வாழும் நான் இத்தனை நாள் பொறுத்துக்கொண்டேன் ஆனால் இனிமேல் (பிரிவும் காதலும் தரும்) இத்துன்பத்தை பொறுக்கமாட்டாது என்ற அளவுக்கே என்னில் இவ்வுடம்பினுள் உள்ள என் அகத்தினுள் (இத்துன்பம்) உள்ளது.

ஆனால் இவ்வளவு துன்பத்தை தரும் இந்த காதலும் நாணமும் என் உயிரை காவுவாங்காமல் இருக்கிறது. ஏனெனில் அவர் வருவார் என்ற நம்பிக்கையில் /ஆசையில் உயிரை மட்டும் வைத்துவிட்டு என்னை இப்படி வாட்டுகிறது. என்னாலும் என் உடம்பாலும் பொறுக்கமுடியவில்லை.


”கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே” (குறுந் 112:1-2)

“காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்” (குறுந் 231:4-5)


கலித்தொகைப் பாடலும் இவ்வாறே கூறுவதாகக் கொள்ளவேண்டும். அப்பாடலானது. இப்பாடலில் இது இன்னுமே தெளிவாகிறது.

“மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கி ஆங்கென்னை
நலியும் விழுமம் இரண்டு” (கலி 142:55-8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன. (பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)

மணக்குடவர் உரை
வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று. (காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்) இது தலைமகள் மனமகிழ்ச்சி யிதுவென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

சாலமன் பாப்பையா உரை
காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain