இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
thirukkural english meaning விளக்கம்
jeyamohan
அமைச்சியல் அவையறிதல் குறள் 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மையவர்
குறள் 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.
தெரிந்து - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.
நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.
உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்
சொல்லுக - சொல்லுதல் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.
சொல்லின் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
நடை - காலாற்செல்லுகை; பயணம்; அடிவைக்குங்கதி; வாசல்; இடைகழி; ஒழுக்கம்; வழக்கம்; நீண்டநாள்; நடைகூடம்; இயல்பு; அடி; கூத்து; தொழில்; செல்வம்; ஒழுக்கநூல்; நித்தியபூசை; கோயில்; கோள்முதலியவற்றின்கதி; கப்பல்ஏறும்வழி; மொழியின்போக்கு; வாசிப்பின்நோட்டம்; தடவை
தெரிந்த - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.
நன்மையவர் - நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.
முழுப்பொருள்
பலர் கூடியுள்ள ஒரு அவையில் எவ்வாறு பேசவேண்டும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்
1) இடைதெரிந்து நன்குணர்ந்து - நாம் பேசுகின்ற இடத்தில் கூடியுள்ளவர்களின் திறன் அறிந்து அதற்கு ஏற்றாற்போலும், அவர்களின் கூட்டாக இருக்கும் நேரத்தின் மதிப்பையும் உணர்ந்தும், நாம் சொல்லும் சொல்லின் இடத்தையும் அறிந்தும் (அதாவது பலர் பேசுகின்ற இடத்தில முன்பு பேசியவர் கூறியதை மறுபடியும் கூறாமல்), நேரத்தின் மதிப்பை உணர்ந்தும் (அதாவது முக்கியமானவற்றை பிறர் ஐயமற எளிதில் விளங்கும் வண்ணம் சுருக்கமாக சொல்லுதல்), தவறாக பேசினால் அதனால் வரக்கூடிய துன்பத்தையும் அதன் விளைவுகளையும் உணர்ந்தும் பேசவேண்டும்.
2) சொல்லின் நடைதெரிந்த - சொல்லின் நடை என்றால் மொழியின் இயல்பு அது பயணிக்கக்கூடிய தொலைவு அது ஆற்றக்கூடிய தாக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அது மட்டுமின்றி சொல் என்பது செல்வத்திற்கு சமம். அதனை சிக்கனமாக செலவிட வேண்டும். ஆதலால் குறைவான ஆழமான பொருத்தமான ஆக்கப்பூர்வமான சொற்களை தேர்வு செய்து பேசவேண்டும். (பொருத்தமான சொற்களை தேர்வு செய்யவேண்டும் என்றால் அவருக்கு நல்ல வாசிப்பு பழக்கம் இன்றியமையாததாகும்). அதுமட்டுமின்றி நாம் கூறும் நடையில் தெளிவு இல்லையென்றால் பிறர் அதை தவறாக புரிந்துக்கொள்ளவும் ஐயங்களுடன் புரிந்துக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் தெளிவாக பேசவேண்டும்.
மேற்சொன்னவனாரு ஒரு அவைதனில் பேசவேண்டும்.
பரிமேலழகர் உரை
சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தௌ¤ந்து சொல்லுக. (சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மையாமவற்றை யறிந்து சொல்லுக: சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார். இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.
மு.வரதராசனார் உரை
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.
Snippets from Orator Bharathi Bhaskar
During a literary debate on Kambar's Ramayanam, this question popped -
Where should one draw the line when interpreting a poet's words? - Scholar & Orator Kambvarti Ilangai Jeyaraj replied
Do not move from the word to the meaning - move from the meaning to the word. First search for the undertone in the poet's heart; then explore what the chosen word would mean.
Three lessons in the art of reading poetry:
1) Realize poems, don't analyze them: The finest poems gives us gifts - to the head, the heart, or the soul. To read poetry is to embark on a pilgrimage, not to crack a code. It is the journey where a reader is transformed to a seeker who may walk alone, but whose heart is free and unbound.
2) Poetry is not about dissecting but about integrating: A poem is not a building where you remove every brick and scaffolding to understand the technicalities. it is a spiritual experience to see how every word and phrase integrate to show us that we are tiny droplets of water in the mighty ocean of life. Poet Billy Collins warns us not to tier poems to chairs and beat them with rubber hoses until they give up their meaning.
3) You don't have to agree with poets point of view: it is one thing to disagree with a poet; it is another to drag the poet towards your point of view, twisting words to fit accordingly. what are words, after all, but a container of the soul? should we be disposing of the food and eating the container.
Poetry, at its finest, is a mirror. it shows us what we are. it awakens what is unseen, untouched, and unspoken within us.
The purpose of epics is to lift human beings from the lowest valleys to the highest peaks - not the reverse.
Thiruvalluvar knew well the weight a word can carry. In kural 712, he cautions.
Those who are blessed with eloquence, assess the audience,
Study the words carefully and evaluate the underlying meaning.
English Meaning - As I taught a kid - Rajesh
While speaking to an audience follow the below
1) Know the place and know the audience. - The place here means, it can be a huge stage or an opportunity such as conferences, seminars, business review meetings etc. Audience here means, it can be scholars, scientists, business owners, investors, writers etc. So, when in an high profile gathering, one has to understand the value of all the audience's time. One has to speak with high content without beating around the bush. One can keep the speech dense with clarity and coherence. If one doesn't utilize the time effectively or one doesn't speak appropriate things then he or she will not be listened and might be punished or not given another opportunity so easily.
In today's internet age, one might speak through radio, television, podcasts, youtube etc. These videos are listened or watched by millions of people around the world. If our speech doesn't deliver any value for the time they invest, people will soon unsubscribe.
2) Know your words and language - One has to design the tone and language of his speech according to the audience. All the speeches should have the clarity and coherence. The speech can be and has to be dense if it is an high profile meeting. For layman, the speech has to be easily digestible without giving any room for misinterpretation. So, one has to choose the right set of words
Questions that I ask to the kid
When speaking to an audience what are the two things you should be aware of?
Join the conversation