குறள் 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
பொருள்
முழுப்பொருள்
நிறை என்றால் மாட்சிமை மனவடக்கம் பூரணம் வலிமை ஆகிய பொருள்கள் உண்டு. இந்த எல்லா பொருள்களும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஆதலால் நிறை என்னும் உடைமை நம்மை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு பொறை என்னும் பொறுமை மிக மிக அவசியம். ஆதலால் ஒருவர் பொறுமையை போற்றி கடைப்பிடித்தால்தான் அவரிடம் மாட்சிமை வலிமை மனவடக்கம் பூரணம் ஆகியவை நீங்காது இருக்கும்.
ஒருவர் கோபத்தினாலோ சபலத்தினாலோ அறிவின்மையாலோ பொறுமை இழந்து தவறு இழைத்தால் அது அவருடைய புகழையம் மாட்சிமையும் கெடுத்துவிடும். சில பல சமயங்களில் பொறுமையை இழந்தால் நமது மனதின் சமநிலை இழந்துவிடுவோம். நமது மனது சமநிலை இழந்தால் நமது வலிமையும் குறைந்துவிடும். ஆதலால் நமது வலிமை நீங்காது இருக்க வேண்டும் என்றால் நாம் பொறுமையை இழக்காது இருக்க வேண்டும்.
ஏலாதியிலே(6) இக்கருத்தையொட்டி, “நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையேபொறையுடைமை” என்று அறமுடையார்க்கு வேண்டிய ஆறுகுணங்களிலே மனக்கட்டுப்பாடு (நிறை), நற்பண்பு (நீர்மை) பொறையுடமை என்று காணப்படுகிறது.
பொறுமை என்பது அச்சத்தினாலோ, அல்லது ஏமாளிதனத்தினாலோ கொள்வது என்று. பொறுத்தார் பூமி ஆள்வார் என்னும் வழக்கு, மகாபாரதக் கதையில் வரும் தருமனின் பொறுமைக்காக சொல்லப்படுவது. மற்ற உடன்பிறப்புகளையும் விட கௌரவர்கள் செய்த தவறுகளையும், இழைத்த அநீதிகளையும் பொறுத்துக்கொண்டது, தன்னுடைய உடன்பிறப்புகளும் பொறுமையை கடைபிடிக்கச் செய்தது, அச்சத்தினால் ஏற்பட்ட கோழைதனத்தினாலோ, ஏமாளிதனத்தினாலோ, கையாலாகத்தனத்தினாலோ அல்ல. தன்பெயருக்கு ஏற்றார்போர், பொறுமையை ஒரு அறமாகவே கடைபிடித்ததால்தான் பின்னாளில் அரசையும் ஆளக்கூடிய நிலைக்கு உயர்ந்தான். கங்கபட்டனாக விராட அரசனிடன் அவன்காட்டிய பொறுமை, விராடநாட்டின் நாசத்தையே தவிர்த்ததும் திரௌபதி வாயிலாக நாம் அறிவது.
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.
நீங்காமை - பிரியாது இருக்க
வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
போற்றி - போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்.
ஒழுக - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.
ஒழுகப்படும் - கடைபிடிக்கப்படும்
முழுப்பொருள்
நிறை என்றால் மாட்சிமை மனவடக்கம் பூரணம் வலிமை ஆகிய பொருள்கள் உண்டு. இந்த எல்லா பொருள்களும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஆதலால் நிறை என்னும் உடைமை நம்மை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு பொறை என்னும் பொறுமை மிக மிக அவசியம். ஆதலால் ஒருவர் பொறுமையை போற்றி கடைப்பிடித்தால்தான் அவரிடம் மாட்சிமை வலிமை மனவடக்கம் பூரணம் ஆகியவை நீங்காது இருக்கும்.
ஒருவர் கோபத்தினாலோ சபலத்தினாலோ அறிவின்மையாலோ பொறுமை இழந்து தவறு இழைத்தால் அது அவருடைய புகழையம் மாட்சிமையும் கெடுத்துவிடும். சில பல சமயங்களில் பொறுமையை இழந்தால் நமது மனதின் சமநிலை இழந்துவிடுவோம். நமது மனது சமநிலை இழந்தால் நமது வலிமையும் குறைந்துவிடும். ஆதலால் நமது வலிமை நீங்காது இருக்க வேண்டும் என்றால் நாம் பொறுமையை இழக்காது இருக்க வேண்டும்.
ஏலாதியிலே(6) இக்கருத்தையொட்டி, “நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையேபொறையுடைமை” என்று அறமுடையார்க்கு வேண்டிய ஆறுகுணங்களிலே மனக்கட்டுப்பாடு (நிறை), நற்பண்பு (நீர்மை) பொறையுடமை என்று காணப்படுகிறது.
பொறுமை என்பது அச்சத்தினாலோ, அல்லது ஏமாளிதனத்தினாலோ கொள்வது என்று. பொறுத்தார் பூமி ஆள்வார் என்னும் வழக்கு, மகாபாரதக் கதையில் வரும் தருமனின் பொறுமைக்காக சொல்லப்படுவது. மற்ற உடன்பிறப்புகளையும் விட கௌரவர்கள் செய்த தவறுகளையும், இழைத்த அநீதிகளையும் பொறுத்துக்கொண்டது, தன்னுடைய உடன்பிறப்புகளும் பொறுமையை கடைபிடிக்கச் செய்தது, அச்சத்தினால் ஏற்பட்ட கோழைதனத்தினாலோ, ஏமாளிதனத்தினாலோ, கையாலாகத்தனத்தினாலோ அல்ல. தன்பெயருக்கு ஏற்றார்போர், பொறுமையை ஒரு அறமாகவே கடைபிடித்ததால்தான் பின்னாளில் அரசையும் ஆளக்கூடிய நிலைக்கு உயர்ந்தான். கங்கபட்டனாக விராட அரசனிடன் அவன்காட்டிய பொறுமை, விராடநாட்டின் நாசத்தையே தவிர்த்ததும் திரௌபதி வாயிலாக நாம் அறிவது.
ஒப்புமை
“பெருமையும் வண்மை தானும் பேரெழில் ஆண்மை தானும்
ஒருமையின் உணர நோக்கின் பொறையின தூற்ற மன்றே” (கம்ப. மகுடபங்கப்.31.)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும். நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.
மு.வரதராசனார் உரை
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

No comments:
Post a Comment