புக்கில் அமைந்தின்று கொல்லோ

thirukkural meaning விளக்கம் புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை
குறள் 340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
புக்கில் - உடம்பு; வீடு; புகலிடம்; தங்குமிடம்.

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமைந்தின்று -  தகுதியில்லாத

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

கொல்லோ - நோய்ப்பட்ட  , துன்புறுத்துகின்ற

உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

உடம்பினுள் - உடம்பிற்குள்ளே

துச்சில் - ஒதுக்கிடம்; தங்குமிடம்; மயில்முதலியவற்றின்கொண்டை.

இருந்த - iru-   4 v. intr. [K. iru, M. iri.]1. To exist; உளதாதல் ஊரிலே ஏரி இருக்கிறது.2. To remain; நிலைபெறுதல் வலம் வரும்படி யிருப்பது கயிலைமால் வரையே (கந்தபு. திருக்கைலாச. 12).3. To sit down; உட்காருதல் நிற்றலிருத்தல் கிடத்தலியங்குதலென்று (நாலடி. 334). 4. To sink, as afoundation; to disappear; உள்ளிறங்குதல். சுவர்இருந்துபோயிற்று. 5. To live; சீவித்தல் நெடுநாளிருந்தபேரும் (தாயு. பரிபூ. 10). 6. To be readyto act; to be in readiness for any duty or project; to be on the point of acting or going;ஆயத்தமாயிருத்தல். மீன்பிடிக்க இருக்கிறான். Colloq.7. To fancy, imagine, expect, hope; உத்தேசித்தல் நம்பிமாரென்றிருந்தோம் (தமிழ்நா. 216).--part.Sign of the perfect tense after a participial verb,as in வந்திருந்தான்.--aux. Auxiliary verb: ஓர்துணை வினை எழுந்திருந்தான். 

உயிர்க்கு - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
உயிருக்கு நிலையான இடம் என இவ்வுடம்பு இல்லை. உயிர் இருக்கும் இவ்வுடம்பும் நிலையானது இல்லை. ஏனெனில் உடம்பிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் நோய் வரலாம். நோய் வந்து துன்புற்று இறந்தப்பின் உயிர் இவ்வுடலைவிட்டுப்போகும். ஆதலால் நமது உடலும் நிலையில்லாதது அதில் இருக்கும் உயிரும் நிலையில்லாதது. அதனால் வாழ்வில் எதுவே நிலையானது இல்லை.

உயிர் என்றானது தூய இடம் ஒன்றினை தேடி அலைகிறது. ஆதலால் நமது உடம்பை மனதை உயிருக்கு துகுதியாக தூய்மையாக வைத்திருத்தல் மிக அவசியம். மனதிலும் செய்கையிலும் அழுக்கு கொள்வது என்பது உடம்பில் நோய் இருப்பது போன்றதாகும். அப்படிப்பட்ட நோய்வாய்ப்பட்ட உடம்பென்பது எப்பொழுதும் இந்த உயிருக்கு துன்பத்தை தரும். ஆதலால் இந்த உயிர் வேறு உடம்பு தேடி பிறப்பைத் தேடிச் சென்றுவிடும். 


பி.கு: பிறரிடம் குறை தேடும் மக்களே சிந்தியுங்கள், உங்கள் உயிருக்கும் உங்களிடம் குறை தென்பட்டால் அதற்கு உங்களைப் பிடிக்காது. ஆதலால் உங்கள் உயிர் உங்களில் தேடும் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.).

மணக்குடவர் உரை
தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

சாலமன் பாப்பையா உரை
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உயிருக்கு ஏனோ சொந்தவீடு அமைவதில்லை.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  குடி யிருக்கவீ டின்றி அலையும் மாந்தர்
  குறை யதனை நினைத்து நினைத் தேங்குகின்றார்
  அடி யிரண்டில் உல காண்ட வள்ளுவரோ
  அறிவார்ந்த செய்தி ஒன்றைச் சொல் லுகின்றார்
  துடிக் கின்ற உயிரதுவும் குடி யிருக்க
  தூய ஒரு இடம் இன்றி வீடு தேடி
  அடிக் கடியே இடம் மாற்றி அலை கிறதாம்
  அதனால் தான் பிறப் பிறப்பு நிகழ் கிறதாம்

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain