குறள் 1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]
பொருள்
மணி - கோமேதகம்; நீலம்; பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம்என்னும்ஒன்பதுவகைஇரத்தினங்கள்; நீலமணி; காண்க:சிந்தாமணி; பளிங்கு; கண்மணி; உருத்திராக்கம்; தாமரைமணிமுதலியன; தானியமணிநஞ்சுநீக்குங்கல்; சந்திரகாந்தக்கல்; மணிமாலை; அணிகலன்; உருண்டைவடிவமாயுள்ளபொருள்; மீன்வலையின்முடிச்சு; ஆட்டினதர்; வீடுபெற்றஆன்மா; அழகு; சூரியன்; ஒளி; நன்மை; சிறந்தது; கருமை; கண்டை; அறுபதுநிமிடமுள்ளநேரம்; ஒன்பது; ஆண்குறியின்நுனி; பெண்குறியின்ஓர்உள்ளுறுப்பு.
மணியுள் - மணிகளை கோர்க்கும்
திகழ் - ஒளி; தோற்றம்.
தரும் - கொடுக்கின்ற
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை
போல் - போன்று
மடந்தை - பெண்; பதினான்குமுதல்பத்தொன்பதுவயதுவரையுள்ளபெண்; பருவமாகாதபெண்; சேம்புவகை
அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.
யுள் - உள்ளே; உள்
திகழ்வது - ஒளி; தோற்றம்.
ஒன்று - ஒன்று
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்
முழுப்பொருள்
அணிகல மணிகளை ஒன்றாக கோர்க்கும் நூல் கண்ணுக்கு புலப்படாது. ஆனால் அந்த நூல் இல்லை என்றால் அழகிய அணிகலனாய் அந்த மணிகள்உருப்பெறாது. அதுபோல என் தலைவியின் (காதலியின்) குணங்களை கோர்க்கும் அழகிலும் கண்ணுக்கு தெரியாத ஒரு குறிப்பு உண்டு. அது என்னவென்று எனக்கு தெரியவில்லை என்கிறான் தலைவன்.
இரு மணிகளுக்கு இடையே நூல் என்பதனை அறியலாம். ஆனால் இவள் ஒரு முழு பெண். இவள் உள்ளே இருக்கும் அந்த துன்பத்தை அவள் அழகால் மறைத்து இருக்கிறாள் என்பதே இங்கு கண்ணுக்கு புலப்படாத குறிப்பு என்று படுகிறது. தலைவி காதலன் உடன் இருந்தால் தலைவன் இப்பொழுது என்னுடன் இருக்கிறான் ஆனால் இவன் என்னை விட்டு போய்விடுவானோ என்ற கவலை அவள் உள்ளே இருக்கலாம் அல்லது பிரிந்திருந்து ஒன்று சேர்ந்த தலைவனிடம் இவ்வளவு காலம் தாங்கிய துன்பத்தை அவள் உள்ளே புதைத்திருக்கலாம். பிரிந்து இருக்கும் பொழுது ஊர் மக்களுக்கு காண்பிக்க கூடாது என்பதற்காக தன் அழகால் அவள் துன்பத்தை மறைக்கலாம்.
இத்திருக்குறளைக்கேட்டால், எனக்கு சேதுப்படதி படத்தில் நிகழும் ஒரு சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. மனைவி தலைவன் மீது கொண்டு இருக்கும் அன்பினால் ஊடலுக்குப் பின் பொட்டுவைத்துக்கொண்டு அலங்காரம் செய்துக்கொண்டு அழகாக வருவாள். அக்குறிப்பை தலைவன் கண்டுப்பிடித்துவிடுவான். அதாவன் காதலை கண்டு அறிந்துக்கொள்வான்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. (அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.
மு.வரதராசனார் உரை
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.
No comments:
Post a Comment