Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

குறள் 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
[பொருட்பால், அமைச்சியல், தூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

ஆராய்ந்த - ஆராய்ச்சி - ஆய்வு; பரிசீலனம்; சோதனை தலையாரி; சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்
சொல்வன்மை - பேச்சுவன்மை; சொல்திறம்.

தூது - இருவரிடையேபேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக் கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

உரைப்பார்க்கு - சொல்வோர்க்கு; முழங்குவோர்க்கு 

இன்றி யமையாத  - இன்றியமையாமை - இல்லாமல்முடியாமை, அவசியம்

மூன்று - மூன்று பண்புகள் 

முழுப்பொருள் 
தன் அரசர் மீதும் (தன் மக்கள் மீதும்) (தன் அலுவலகத்தின் மீதும்) அன்பு, தூது செய்யப்போகும் தளத்தில் / கருத்தில் / subject ஆழ்ந்த நுண்ணிய அறிவு சாமர்த்தியம் மதிநுட்பம், மற்ற தரப்பினரிடையே சொல் தேர்ந்து உரைக்கும் சொல்வன்மை பேச்சுவன்மை ஆகிய மூன்று குணங்களும் தூது உரைப்பவர்க்கு மிக தேவையான அவசியமான பண்புகளாக திருவள்ளுவர் கூறியுள்ளார். 

இதிகாசத் தூதுவர்களிடையே அனுமனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு. ஒன்றில் அவதார புருடனுக்காக அசுரனிடம், வானரன் தூதுசென்றான். மற்றொன்றில் அவதார புருடனே நண்பர்களுக்காகத் தூதுசென்றான். இருவருமே இக்குறளில் சொல்லப்படும் மூன்று குணங்களையும் கொண்டவர்கள்.

அனுமன் இராமபிரானின் மீது கொண்ட அன்பினால் மட்டுமன்றி, கீர்த்தி பெற்ற இராவணன் ஒரு பெண்மேல் கொண்ட ஆசைக்காக அவனையும், அவன் குடிகளையும் அழித்துக்கொள்ளக்கூடாதே என்று பகைவனுக்காகவும் பரிவு கொண்டான். அவனுடைய கூர்ந்த மதிநுட்பமும், சொல்வன்மையும், இராமாயணத்தில் சுந்தரகாண்டம் முழுவதிலும் சொல்லப்படுகிறது. அவனே சொல்லின் செல்வன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒரு இடத்தில் இலங்கையில் இருந்து வந்து இராமனை சந்திக்கையில் "கண்டேன் சீதையை" என்று ராமனிடம் கூறுவான். "கண்டேன்" என்பதை முதலில் கூறியதில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம் அனுமன் எவ்வளவு தேர்ந்து சொல் உரைப்பான் என்று.

கிருஷ்ணனோ, பாண்டவர், கெளரவர் என்ற இரு தரப்புக்கும் பொதுவானவன். துரியோதனுக்காக தன்னுடைய படையே கொடுத்த வள்ளல், சமத்துவவாதி. அன்பின் காரணமாகவே தூது சென்று ஐந்து நகரங்கள் என்று தொடங்கி, ஐந்து வீடாவது கொடுக்கவேண்டுமென்று வாதாடினான். அது குரு வம்சம் அழிந்துபடக்கூடாது என்ற அன்பினாலும், அக்கறையினாலும் விளைந்தது. அவனுடைய மதிநுட்பமும், அழகுற ஆராய்ந்து பேசும் பாங்கும் பாரத்தின் பக்கங்களில் பல இடங்களிலும் சொல்லப்படுகிறது.

மேலும் அஷோக் உரை 

ஒப்புமை
”மாண்டமைந்தார் ஆய்ந்த மதிவனப்பே வன்கண்மை
ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்” (ஏலாதி 26)

பரிமேலழகர் உரை
அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.

மு.வரதராசனார் உரை
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன

English Meaning - As I taught a kid - Rajesh
An emissary/envoy/mediator should have the following qualities
1) Love - Love for the king, kingdom, people of the country he is representing because they are the ultimate beneficiaries, love for his family members/relative for whom he is mediating, love for his employees in his organisation, love for humanity because mediation is about creating a win-win situation

2) Knowledge and Wisdom - deep knowledge on the subject/area in which he is going to mediate and practical wisdom to handle difficult conversations and create a win-win situation

3) Sagacious speech - wise, sensible, prudent speech using right words,tone, tenour that helps to influence people and win arguments and hearts.


Questions that I ask to the kid
List three qualities for an emissary/envoy/mediator. Why love is essential quality for a mediator?

No comments:

Post a Comment