Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்

குறள் 671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
சூழ்ச்சி - ஆலோசனை; நுண்ணறிவு; ஆராய்தல்; வழிவகை; மனத்தடுமாற்றம்.

முடிவு - இறுதி; எல்லை; தீர்மானம்; முடிவானஉட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

துணிவெய்தல் - துணிவுடன் எய்தல் 

அத்துணிவு - அந்த துணிவு

தாழ்ச்சி - கீழ்மை; தாழ்வு; தாழ்மை; குறைவு; பணிவை வெளிப்படுத்தும் சொல்; வணக்கம்; ஆழம்; இகழ்ச்சி; ஏலாமை; காலநீட்டிப்பு; தவறு; நிலைகெடுதல்; விழுதல்.

தாழ்ச்சியுள் - கீழ்மைகளுடன் , காலா நீட்டிப்புடன் , தவறுகளுடன்,

தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

முழுப்பொருள் 
ஒரு செயலை செய்யும் முன் அச்செயலை பற்றி முழுவதுமாய் ஆராய வேண்டும். அச்செயலின் விளைவுகளையும் பயன்களையும் அச்செயல் செய்யும் பொது வரக்கூடிய தடங்கள்களையும் அச்செயல் செய்யக்கூடிய நேரத்தையும் காலத்தையும் நன்கு ஆராய்ந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். அப்படி எடுக்கும் முடிவு அச்செயல் செய்வதற்கான துணிவை  மனவுறுதியை செயலின் மீது நம்பிக்கையை தர வேண்டும். 

அப்படி ஒரு முடிவை எடுத்த பின்பு அதனை உடனே செயல்முறைபடுத்தி முடிக்க வேண்டும். அப்படி இல்லாமல் அச்செயலை செய்ய காலம் தாழ்த்துவது அச்செயலுக்கு தீமையையே தரும். அது குற்றமும் ஆகும். ஏனெனில் அச்செயலை பற்றி ஆராய பல மணி நேரங்களை பயன்படுத்தியுள்ளோம். செயலை செய்யாது இருப்பது காலம் தாழ்த்துவது அந்த ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நேரங்களை வீண் செய்வதாகும். நேரத்தை வீண் செய்வது குற்றமாகும்.


மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. ('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.) .

மணக்குடவர் உரை
சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

Thirukkural - Management - Decision Making
The objective of any lengthy and detailed discussion of a subject is to take a

decision. However, delaying to execute the decision taken is a destructive thing as that sort of delay brings disaster, warns Kural 6 71. It is often said that in corporate practices people are good decision makers but poor executioners. Hence, this warning by Valluvar is highly relevant.

The end of deliberation is decision
To decide and dawdle is bad.

No comments:

Post a Comment