குறள் 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
கேட்டார் - பிறர் கூறுவதை செவி கொடுத்து கேட்போர்
பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை
பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை
பிணிக்கும் - பிணித்தல், சேர்த்துக்கட்டுதல்; வயப்படுத்துதல்.
தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு
தகையவாய்க் -குணம் / தகுதி கொண்டதாகவும்
கேளாரும் - செவியும் மனமும் கொடுத்து கேளாதவர்கள்
வேள் - கலியாணம்; விருப்பம்; மன்மதன்; முருகன்; வேளிர்குலத்தான்; சளுக்கவேந்தன்; சிற்றரசன்; சிறந்தஆண்மகன்; மண்
வேட்ப - வேட்பு - வேட்கை, விருப்பம்
மொழிவதாம் - மொழிதல் - சொல்லுதல்.
மொழிவதாம் - மொழிதல் - சொல்லுதல்.
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
முழுப்பொருள்
நமது பேச்சை செவிக்கொடுத்தும் மனம் கொடுத்தும் கேட்போரை நமது பேச்சாற்றலினால் கட்டிப்போடும் பண்பும் குணமும் கொண்டதாய் பேச்சு இருக்க வேண்டும். [ஆதலால் கேட்போர் மறுபடியும் மறுபடியும் கேட்க வேண்டும் என்றால் நமது பேச்சு அரைத்த மாவினை அரைக்க கூடாது. புதிது புதிதாய் இருக்க வேண்டும்]. பேசினால் கட்டிப்போடுவது என்பது கேட்போர் பிற சிந்தனைகளில் செல்லாமல் நமது பேச்சில் முழுவதுமாய் இருக்க வேண்டும் என்றால் நாம் பேசும் கருத்தில் முழு தெளிவு நமக்கு இருக்க வேண்டும். அதனை நயம் பட தங்கு தடையின்றி உரைக்கும் சொல் தேர்ச்சி வேண்டும்.
ஒரு மேடையில் அல்லது குழுவில் ஒரு அலுவலக அறையில் நமது பேச்சினை எல்லோரும் கேட்க விருப்பமாக இருக்க மாட்டார்கள். பல சமயங்களில் கேட்பவருக்கு அதனை புரிந்துக்கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். சில சமயங்களில் கேட்பவருக்கு மனதில் வேறு சில குழப்பங்கள் இருக்கும். ஆதலால் செவிக்கொடுத்தோ மனம் கொடுத்தோ கேளாதவர்களையும் நமது பேச்சை விரும்பி கேட்கவைக்கும் நயம் நமது சொல்லினில் இருக்க வேண்டும். அது கற்றவர் மட்டும் புரிந்துக்கொள்ளும் சொல்லாக இல்லாமால் கல்லாதவரும் எளிதாய் புரிந்துகொள்ளும் விதமாய் இருக்க வேண்டும். அவ்வாறு நமது பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை விருப்பமுற பேசுதலுக்கு உண்டான இலக்கணமாக ஐந்து குணங்களைக் கூறுகிறது. அவையாவன, வழுவின்மை (குற்றமறப் பேசுதல்), சுருங்கச் சொல்லுதல், விளங்கச் சொல்லுதல், இனிமையாகப் பேசுதல், பேசுதலுக்கான விழுப்பயனை (எப்பயன் நோக்கிச் சொல்லப்பட்டதோ, அப்பயனை முழுமையாகத் தருதல்).
ஒரு மேடையில் அல்லது குழுவில் ஒரு அலுவலக அறையில் நமது பேச்சினை எல்லோரும் கேட்க விருப்பமாக இருக்க மாட்டார்கள். பல சமயங்களில் கேட்பவருக்கு அதனை புரிந்துக்கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். சில சமயங்களில் கேட்பவருக்கு மனதில் வேறு சில குழப்பங்கள் இருக்கும். ஆதலால் செவிக்கொடுத்தோ மனம் கொடுத்தோ கேளாதவர்களையும் நமது பேச்சை விரும்பி கேட்கவைக்கும் நயம் நமது சொல்லினில் இருக்க வேண்டும். அது கற்றவர் மட்டும் புரிந்துக்கொள்ளும் சொல்லாக இல்லாமால் கல்லாதவரும் எளிதாய் புரிந்துகொள்ளும் விதமாய் இருக்க வேண்டும். அவ்வாறு நமது பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை விருப்பமுற பேசுதலுக்கு உண்டான இலக்கணமாக ஐந்து குணங்களைக் கூறுகிறது. அவையாவன, வழுவின்மை (குற்றமறப் பேசுதல்), சுருங்கச் சொல்லுதல், விளங்கச் சொல்லுதல், இனிமையாகப் பேசுதல், பேசுதலுக்கான விழுப்பயனை (எப்பயன் நோக்கிச் சொல்லப்பட்டதோ, அப்பயனை முழுமையாகத் தருதல்).
மேலும் அஷோக் உரை
ஒப்புமை
”கெட்டார்க்கு இனியவாய்ச் சொல்லானேல்” (தகடூர்.யாத்திரை)
“நகைசால் வாய்மொழி” (பதிற்று.55:12)
“செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சி” (அகநா.66:3)
கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
‘கேட்டவரை பிணித்துவைக்கக்கூடியதாய் கேளாதவர்கள் ஏங்கக்கூடியதாய் இருப்பதே சிறந்த உரையாடல்’ என்று சொல்லும் குறள் பேச்சாற்றலின் கவற்சியையும் தீவிரத்தையும் விவரிக்கிறது. தங்குதடையற்ற பேச்சின்மூலம் கேட்பவரை பிற சிந்தனை இல்லாமல் பிணிக்கும் ஆற்றலைப்பற்றியது இந்த வருணனை. ஆனால் அடுத்து வரும் குறள் இந்தக்கருத்தின் மறுபக்கமாக அமைகிறது
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கில்லை.
‘ஒவ்வொரு சொல்லையும் அதன் வலிமையையும் உட்பொருளையும் அறிந்து சொல்லுக. அறம் பொருள் இரண்டையும் அடைய அதைவிட சிறந்த வழி ஏதுமில்லை’. இங்கே சொல்லின் மீதான ஆழ்ந்த பிரக்ஞையின் கட்டுப்பாட்டை வள்ளுவர் சொல்கிறார். கேட்டார் பிணிக்கும் சொல்லின்பத்தின் மறுபக்கம் இது. இவ்வாறு குறளின் போக்கில் ஒவ்விரு குறளுக்குப் பின்னரும் எழும் ஏராளமான வினாக்களை விவாதித்து அதன் முடிவில் அமைக்கப்பட்டதாகவே அடுத்த குறள் அமைந்திருக்கிறது.
பரிமேலழகர் உரை
கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது. ((அக்குணங்களாவன : வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை
நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).
Management - Public Speaking - Eloquence
An eloquent speaker is one who speaks in such a way that those who listen to his speech long to listen further and those who miss the opportunity to listen to his speech will regret that they have missed the opportunity. Kural 643 presents that practice eloquently.
Eloquence charms the hearer and fills with longing
Those who have not heard.
The listeners will want him to speak on and they will feel sorry, if the speech ends soon. Those who have missed listening to him will regret that they have missed listening to him. Therefore, a speaker must know when to stop.
The right time to end a speech is when the audience wants you to go on. In addition, the delivery and content must be so rich that when those who missed the chance to listen to your speech must long to listen to. A classic example is Abraham Lincoln’s ‘Gettysburg Address.’ Though the speech was very short, still people, especially Americans, listen to that even today. The audience of Lincoln would have been surprised that the speech was over. That speech is also one of the most used speeches for declamation.
English Meaning - As I taught a kid - Rajesh
When we speak, our speech quality should bind those who lend their ears (and the erudite) and cast spell on even those who don't (and the ignorant). Not always we speak to people who like/love us and who listen to us. But, even people who like us may not listen to us continuously if we don't speak well or bind them. They will get distracted or think something else in the back of their mind. So, we have to speak with quality and bind them in our speech. Also, erudite people who know the subject would easily get binded in our speech yet it is our duty to sustain in their interest in our speech. On the other hand, there will be who don't know us or who don't like us or who are ignorant of the subject. It is our duty to bind them in our speech with a quality, coherence, sweetness, simplicity and clarity in speech
Questions that I ask to the kid
How should we speak to people who listen to us and who don't listen to us?
How should we speak to the erudite and the ignorant?
No comments:
Post a Comment