Skip to main content

Posts

Showing posts from February, 2018

039 இறைமாட்சி

பால்  - அறத்துப்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - இறைமாட்சி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 381 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்  உடையான் அரசருள் ஏறு குறள் 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்  எஞ்சாமை வேந்தர்க் கியல்பு குறள் 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்  நீங்கா நிலனான் பவர்க்கு குறள் 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு குறள் 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு குறள் 386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் குறள் 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு குறள் 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் குறள் 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு குறள் 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி பதிவு வரிசை

அறனிழுக்கா தல்லவை நீக்கி

குறள் 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா  மானம் உடைய தரசு [பொருட்பால், அரசியல், இறைமாட்சி] பொருள் அறன் -   அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம் இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல் இழுக்காது - தவறவிடாதல், கைவிடாதல் அல்லவை -  அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.)  நீக்கி -  விலக்கல் நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல். மறன் -  மறம் - வீரம்; கோபம்; பகை; வலிமை; வெற்றி; போர்; கொலைத்தொழில்; யமன்; கெடுதி; பாவம்; கலம்பகத்தின்ஓர்உறுப்பு; மறவர்குலம்; மயக்கம். இழுக்கா - குறையாமல் மானம் -  மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம...

038 ஊழ்

பால்  - அறத்துப்பால் இயல்  - ஊழியல் அதிகாரம்  - ஊழ் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்  போகூழால் தோன்றும் மடி குறள் 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை குறள் 373 நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் குறள் 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு  தெள்ளிய ராதலும் வேறு குறள் 375 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு குறள் 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம குறள் 377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது குறள் 378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின் குறள் 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று  சூழினுந் தான்முந் துறும் பதிவு வரிசை

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

குறள் 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை [அறத்துப்பால், ஊழியல், ஊழ்] பொருள் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். வறிஞன் - பொருளில்லாதவன் படுக்கும் - படுத்தல் - செய்தல்; நிலைபெறச்செய்தல்; சேர்ப்பித்தல்; வளர்த்தல்; உடம்பிற்பூசுதல்; அழித்தல்; பரப்புதல்; தளவரிசையிடுதல்; ஒழித்தல்; வீழச்செய்தல்; எழுத்துகளின்ஒலியைத்தாழ்த்திக்கூறுதல்; கிடத்தல்; பறையறைதல். இழவு - இழப்பு; கேடு சாவு எச்சில் வறுமை ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை. அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அகற்றும் - அகற்றுதல் - நீக்குதல்; துரத்துதல் அகலப்பண்ணுதல், விரிவாக்கல். ஆகல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்; ஆக்கம் ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்...

037 அவாவறுத்தல்

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - அவாவறுத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்  தவாஅப் பிறப்பீனும் வித்து குறள் 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் குறள் 363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல் குறள் 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் குறள் 365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் குறள் 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை  வஞ்சிப்ப தோரும் அவா குறள் 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை  தான்வேண்டு மாற்றான் வரும் குறள் 368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும் குறள் 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் குறள் 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் பதிவு வரிசை

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை

குறள் 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வேண்டுங்கால் - ஒருவருக்கு வேண்டுமென்றால் வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை. வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்....

036 மெய்யுணர்தல்

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - மெய்யுணர்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்  மருளானாம் மாணாப் பிறப்பு குறள் 352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு குறள் 353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்  வானம் நணிய துடைத்து குறள் 354 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு குறள் 356 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்  மற்றீண்டு வாரா நெறி குறள் 357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு குறள் 358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு குறள் 359 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் குறள் 360 காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய் பதிவு வரிசை

இருள்நீங்கி இன்பம் பயக்கும்

குறள் 352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி  மாசறு காட்சி யவர்க்கு [அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம் நீங்கி - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு. இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல். மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு. நீங்கி - - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு. மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழு...