Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நாளென ஒன்றுபோல் காட்டி

குறள் 334
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு
நாள் - nāḷ   n. 1. [T. nāḍu, M. nāḷ.] Dayof 24 hours; தினம் சாதலொருநா ளொருபொழுதைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nāḍu, M. nāḷ.]Time; காலம் பண்டைநாள் (கம்பரா. நட்பு 43).3. Lifetime, life; ஆயுள் நாளோடு வாள்கொடுத்தநம்பன் றன்னை (தேவா. 219, 10). 4. Auspiciousday; நல்ல நாள் நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து(நாலடி, 86). 5. Early dawn; காலை நாண்மோர்மாறும் (பெரும்பாண். 160). 6. Forenoon; முற்பகல் நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை(நாலடி, 166). 7. Lunar asterism; நட்சத்திரம் திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286).8. Lunar day, period of the moon's passagethrough an asterism; திதி (W.) 9. Freshness,newness; புதுமை கோதையை நாணீராட்டி (சிலப்.16, 8). 10. Youth, juvenility, tenderness;இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282). 11. New-blown flower; அன்றலர்ந்த பூ பொன்குறையுநாள்வேங்கை நீழலுள் (திணைமாலை. 31). 12. Asymbolic expression of the last metrical footof one syllable, in veṇpā

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு; eṉṟu   என்-. part. 1. That, usedas a relative part. when it ends a quotationand connects it with the following part of thesentence; என்றுசொல்லி. 2. In special orelliptical constructions, in which it is used as aconnective part. (a) between verbs, as in நரைவரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between anoun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: (d) between an imitative soundand a verb, as in ஒல்லென் றொலித்தது: (e) between an abstract noun and a verb, as in பச்சென்று பசந்தது: (f) between words defining thingsenumerated, as in நிலனென்று, நீரென்று; வினைபெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றிவரும் இடைச் சொல் (தொல். சொல், 261, உரை: நன் 424.) 3. An expletive; ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.  

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்; pōl   போலே, போல, a particle of comparison, as, so as, like.

காட்டி - காட்டுதல்காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

ஈரும் - அரிதல்; அறுத்தல் இழுக்கப்படுதல்.

வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு

வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.- 

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள் (ஜெயமோகன் அவர்களின் உரைகள் இரண்டுமே மகத்தான விளக்கங்கள்)
ஜெயமோகன் உரை [நாள் என]
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்;
வாள் அது உணர்வாற் பெறின்.

உணர்ந்து பார்ப்பவரின் கண்ணில் பார்வைக்கு ஒன்றுபோலவே இருக்கக்கூடிய பற்பல நாட்களாகத் தன்னைப் பிரித்துக்காட்டும் அது ஒரே வெட்டாக உயிரை வெட்டித்தறிக்கும் வாள் போன்றதாகும்.

காலம் நம்மால் துளித்துளியாக உணரப்படுகிறது. நொடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் வருடங்கள். இவை நம் பிரக்ஞையால் உணரப்படுபவை. துண்டுபட்ட காலம் இது. [கண்டகாலம்].

ஆனால் இந்தப் பகுப்புக்கு அப்பால் காலம் என்பது என்ன? அது ஒரே பெருநிகழ்வு. துண்டுபடாத காலம் அது [ அகண்டகாலம்] பிரபஞ்சம் என்பது ஒரே பெருநிகழ்வு. நாம் பிரித்துக்கொள்ளும் காலம் இல்லையேல் அது ஒரு கணம் என்றே சொல்லலாம்.

இருவகைக் காலத்தையும் ஒரேவரியில் சொல்கிறது இக்குறள். மின்னல் போலக் கண்ணிமைக்கும் கணத்தில் நிகழ்வதை நாள் நொடி எனப்பிரித்து உணர்ந்து அதில் திளைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.

ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து எடுத்த ஒரு பகுதி உரைநடையாக [குறளிது - நாள் 3 பகுதி 1 @ 44:35 to 48:00]


வானவன் மாதேவி அவர்கள் (2017 ஜனவரியில் இறந்தார்கள்) தசைச்சிதைவு நோயால் பல நாட்கள் அவதிப்பட்டு இறந்துப்போனார்கள்.  ”நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”. இந்த நாள் தான் மறுநாள் என்று ஒன்றுபோல் காட்டி உயிரை வெட்டிச் செல்லும் வாள் அது உணர்வார் பெறின். அதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் உங்களுடைய உயிரை கொஞ்சம் வெட்டி எடுக்கக் கூடிய ஒரு வாள் அது. நமது ஊர்களில் ஒரு பெரிய வெல்லம் (jaggery) மனையினை வைத்து இருப்பார்கள் குறிப்பாக திருச்செந்தூர் திருவிழாவில். ஒரு நல்ல (nice or soft) வாளினால் அதனை சீவி (வெட்டி) கொடுப்பார்கள் (ஒரு பைசா/ரூபாய் இரண்டு பைசா/ரூபாய் என்று விற்பார்கள். பையன்கள் விளையாட்டாக வாங்கி சாப்பிடுவார்கள்). அந்த வாள் போன்று ஒவ்வொரு நாளும் நீங்கள் கொண்ட உயிர் என்ற வெல்ல கட்டியை சீவி சீவி எடுக்கிறது அந்த வாள்.

(நாள் என ஒன்று) நிகழ்வதே தெரியாமல் ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் உணர்வார் பெறின். பெரும்பாலானவர்கள் அதனை உணர்வது இல்லை. தருமன் யக்ஷனை சந்திக்கும் பொழுது யக்ஷன் கேட்கிறான், இப்பூமியில் மாபெரும் அதிசயம் என்பது என்ன? ஒவ்வொரு நாளும் மானிடர் இறந்துக்கொண்டு இருந்தாலும் நான் மட்டும் கடைசிவரைக்கும் வாழ்வேன் என்று ஒவ்வொருவரும் நினைப்பது போல மகத்தான விந்தையான ஏதும் பூமியில் இல்லை என்று தருமன் பதில் சொல்கிறான். சரியான பதில் என்று யக்ஷன் ஒத்துக்கொள்கிறான்.

(எனக்கு தெரிந்த வரையில் எனக்கு தெரிந்த நபர்களில்/நண்பர்களில்) வானவன் மாதேவி அளவிற்கு அறத்தின் பொருட்டென வாழ்ந்த என்றும் பிறர்க்கென வாழ்ந்த யாரும் கிடையாது. தன் துயரை பிறர் மகழிச்சிக்கென மாற்றிக்கொண்டு வாழ்ந்தார்கள்.  ஏன் அவர்களுக்கு அத்தகைய வாழ்க்கை வாய்த்தது? அவ்வளவு மகத்தான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நிறைவை அடைய முடிந்தது என்றால் அதற்கு காரணம் நாட்கள் எண்ணி தரப்பட்டு இருக்கின்றன என்ற எண்ணம் வானவன் மாதேவி அவர்களுக்கு வந்தது. வானவன் மாதேவி வளரும் பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறார்கள். உயர்நிலை பள்ளியில் கால் தடுக்கி ஒரு நாள் கீழ் விழுகிறார்கள். ஐந்துமுறை கால் தடுக்கும் பொழுது கால் கொஞ்சம் வளைகிறது.  ஒரு மருத்துவர் சொல்கிறார் இது தசைச்சிதைவு நோய். அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள்.



ஐந்து ஆண்டுகள் என்று தெரிந்த உடனே வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு பொருள் இல்லாமல் போய்விடுகிறது. சொத்து சேர்க்க வேண்டியதில்லை, பிள்ளைகளை கரைசேர்க்க தேவையில்லை, பேர குழந்தைக்கு கல்யாணம் செய்துவைக்கத் தேவையில்லை.

ஐந்து ஆண்டுகள் தான். அந்த ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் முக்கியமாகிவிடுகிறது. ஒரு கணம் கூட தனக்கென முக்கியமாகபடவில்லை (வானவன் மாதேவிக்கு). அவ்வளவு மகத்தான வாழ்க்கை அமைய காரணம் நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளினை  (தசையிருக்க நோயை / ஐந்து ஆண்டு என்று) கண்ணால் அவர்கள் பார்த்தது தான்.

திருக்குறளைப் போன்ற ஒரு நூலை படிக்கும் பொழுது யாக்கை (உடம்பு) நிலையாமை பற்றிய அதிகாரத்தை பார்க்கிறோம். என்ன இது ஒரே பண்டார(ம்) தனமாய் இருக்கிறது என்று நமக்கு தோன்றும். ஆனால் வாழ்க்கையை கொண்டாடுவதற்கும்  வாழ்க்கைய அனுபவிப்பதற்கும் வாழ்க்கையை வகுத்துக்கொள்வதற்கும் தான் நாம் நூல்களை (பொதுவாக) படிக்கிறோம்.. இதெல்லாம் கோப்பலங்கள், எல்லாம் அழிந்துப்போய்விடும் என்று ஒருவர் சொல்லும் பொழுது, அதான் தெரிந்ததே வேறு விஷயம் சொல்லு என்று நாம் சொல்வோம்.

ஆனால் இந்த வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த வாள் அதன் நிழல் நம் தலைக்கு மேல் அவ்வப்போது கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. நாம் அனைவரும் செய்யாத ஒன்றை (வானவன் மாதேவி) அவர்களால் செய்ய முடிகிறது என்றால் அதற்கு காரணம் அதனை அவர்கள் உணர்ந்ததனால் தான்.


வானவன் மாதேவி பற்றி
1) வானம்
2) மகத்தான சந்திப்பு
3) அஞ்சலி : வானவன் மாதேவி
4) வானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா
5) வானதி- நினைவுகளினூடாக…
6) நம்பிக்கை மனுஷிகள்  -- காணொளி
7) என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு
8) Care for the Future

(குறும்படம் - காணொளி)


ஒப்புமை
”வாள்போல் வைகறை வந்தன்றால்” (குறுந்தொகை 157:4)

“தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்” (நாலடி.7)

“வாள்க ளாகி நாள்கள் செல்ல” (திருச்சந்த விருத்தம் 112)

”நாளடி யிடுதல் தோன்று நம்முயிர் பருகும் கூற்றின்
வாளின் வாய்த் தலைவப் பாக்கும்ச் செல்கின்றோம் வாழ்கின் றோமே” (குண்டல)

மேலும்: அஷோக் உரை

மானுடர் மறக்கவிரும்புவது எதை? ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா? நிணம்வழுக்க குருதிமழைக்க தலைகள் காலில் இடறும் போர்க்களத்தில் அவன் அக்களியாட்டை கண்டிருக்கிறான். இறந்த முகங்களிலும் சிலைத்திருக்கும் அக்களிவெறி. மானுடர் வெறுப்பது பொழுதென்று சுருண்டு எழுந்து நாள்என்று நெளிந்து காலமென்று படமெடுக்கும் நச்சை. காலத்தை வெல்வதே அமுது. அமுதுண்டவர் இவர். தேவர்கள் இவர்கள்.

நாளடைவில் ஒவ்வொன்றும் அதன் ஒழுக்கை தானே அடைகின்றது. நதிப்பெருக்கில் வீசப்பட்ட பொருட்கள் பெருகுதிசைக்கு முகம் திருப்பி, ஒன்றோடொன்று முட்டிமோதி தங்கள் ஒழுகுவடிவை தாங்களே அமைத்துக்கொள்வதுபோல. அன்றாடம் என்னும் பெருக்கு. அரிதையும் பெரிதையும் எளிதுக்கும் சிறிதுக்கும் வேறுபாடில்லாமலாக்கி தன்னுள் அடக்க அதனால் இயலும். சென்றதையும் வருவதையும் அக்கணம் என்று உருமாற்றகூடிய மாயம்  அது. அன்றாடத்தில் அனைத்தும் பயன்பாட்டுப் பொருள் மட்டுமே கொள்கின்றன. செயல்பாட்டு வடிவம் மட்டும் பூண்கின்றன. ஆகவே அனைத்தும் தங்கள் உட்பொருள் அழிகின்றன. நிலைவடிவு கரைகின்றன.

உட்பொருளும் நிலைவடிவும் அழிந்த ஒன்று இல்லை என்றாகிறது. அன்றாடத்தில் அன்றாடம் அன்றி பிறிதொன்றில்லை. அதை அறியும் உள்ளத்தின் தன்னிலை அன்றி பிறர் எவரும் இல்லை. அன்றாடத்திற்கு அப்பால் உண்மையில் ஏதேனும் உள்ளதா? அது அன்றாடத்தின் எளிமைகண்டு அகம்கசிந்த உள்ளம் விழைவது மட்டும்தானா? வெறும் எண்ணம் மட்டுமா? ஈவிரக்கமற்றது, இடைவெளியின்றி நிறைவது, எதிரீடற்றது, இறைவடிவமோ என்று மயங்கச்செய்வது. அன்றாடத்தின் பெருக்கில் முற்றிலும் மூழ்கி மறைந்து காலத்துளி ஒன்றாக மாறிப்போனான் ஆயுஸ்.

பரிமேலழகர் உரை
நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை
நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Time shows that each and every day are same. However, like a sharp sword, time slices and takes away each day away from our life. Hence, those who realizes that our life is short, we wont' live forever, our life is volatile and, there is no guarantee and choice on death date will intensely utilize every day of their life effectively and do productive works to make their life and world better. They will not post pone stuffs. So, அன்றறிவாம் என்னாது அறம்செய்க.
In Mahabharata, when Yakshan asks Dharma what is the most amusing thing on the earth? Dharma replies that everyday humans see many humans are born and die. Yet, humans believes that nothing will happen to them/their health and they will live for ever. This illusion/maya is the most amusing thing on the earth. Dharma says correct.

Questions that I ask to the kid
Are all days same? Give an example related to it

No comments:

Post a Comment