குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்
சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.
நெஞ்சினார்க்கு - நெஞ்சத்தை உடையவர்க்கு
இல்லை - இல்லை
இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்
சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்
புகல் - புகுகை; இருப்பிடம்; துணை; பற்றுக்கோடு; தஞ்சம்; உடம்பு; தானியக்குதிர்; வழிவகை; போக்கு; சொல்; விருப்பம்; கொண்டாடுகை; பாடும்முறை; வெற்றி; புகழ்; புரையுள்ளது.
முழுப்பொருள்
இருள் என்னும் அறியாமை என்னும் தீங்குதரும் இன்னா (துன்பமான) உலகம் ஆனது மிக கொடியது ஆகும். ஆனால் நெஞ்சத்தில் அருள் என்னும் கருணை, (பிறருக்கு) நல்வினை செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளோர்க்கு அத்தகைய இருண்ட உலகத்தில் இடம் இல்லை.
ஏனெனில் அறியாமை என்னும் இருள் அவர்கள் மனதில் இல்லை. அறிந்தும் மனதில் கருணை இல்லை என்றால் அவர்கள் மனதில் இருள் இருக்கிறது என்றே பொருள் (ஏனெனில் அறிந்ததை கடைப்பிடித்தால் தான் அறிதல்). ஒருக்கால் ஒரு நல்வினை ஆற்றும் பொழுது துன்பங்கள் வந்தாலும் அவர்களுக்கு வாழ்வின் மீது உள்ள நம்பிக்கை ஒளியாய் அவர்களை இருளில் (துன்பத்தில்) இருந்து விலக்கி ஊக்கம் தந்து முன்னே வழி நடத்தி காப்பாற்றும்.
இருள் இல்லையேல் அருள் உண்டு.

அருள் இல்லையே இருள் நிறைந்துவிடும்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).
மணக்குடவர் உரை
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.
மு.வரதராசனார் உரை
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இறையருள் இருந்தால் வாழ்க்கை வலிக்காது.
Comments
Post a Comment